மதுரையில் விஏஓ அலுவலக மேற்கோரை பெயர்ந்து தலையாரி தலையில் விழுந்து விபத்து.!

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவியாளருக்கு தலையில் அடிபட்டது.

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவியாளருக்கு தலையில் அடிபட்டது.

மதுரை மாவட்டம் திருமங்களம் அருகே, பொன்னமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேற்கூரை இன்று பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அருண் பாண்டியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், உக்கிர பாண்டியன், லட்சுமணன், கருப்பாயி ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் தொடர் வடகிழக்கு பருவமழை பெய்த காரணத்தாலும், கிராம நிர்வாக அலுவலக கட்டடமானது ஆண்டுக்கணக்கில் மராமத்து பணிகள் நடைபெறாமல் இருந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.