இங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..இன்று எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன அலர்ட்?

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதன் காரணமாக  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

orange alert yellow alert red alert rain

சென்னை :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு எனவும், 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

அதிகனமழை (ரெட் அலர்ட்)

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதன் காரணமாக  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்)

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை (மஞ்சள் அலர்ட்)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற அலர்ட்டை கொடுத்துள்ளது.

மேலும், வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு குறைந்தது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.