உள்ளே ஒருமாதிரியும், வெளியே ஒருமாதிரியும் அதிமுகவினர் செயல்பாடு உள்ளது – அமைச்சர் குற்றச்சாட்டு

School Education Minister Anil Mahesh has accused the AIADMK of not taking action against the people.

அதிமுகவினர் செயல்பாடு மக்களிடம் எடுபடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு.

சட்டமன்றத்தில் தமிழக அரசை புகழ்ந்து பேசும் அதிமுகவினர் அரசியல் ஆதாயத்திற்காக வெளியே குற்றசாட்டிவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றியத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பணிமனையை திறந்து வைத்தார்.

இதன்பின் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 மாதத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள் என்றார்.

அதிமுகவினர் தேர்தலுக்காக வெளியே தமிழக அரசை குற்றசாட்டுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்றும் உள்ளே ஒருமாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் அதிமுகவினர் செயல்பாடு உள்ளது. எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் சொல்லவேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள் எனவும் குற்றசாட்டிய அமைச்சர், அதிமுகவினர் செயல்பாடு மக்களிடம் எடுபடாது என்றும் குறிப்பிட்டார்.