மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை...!சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை என்று சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பாக  சென்னை தலைமை செயலகத்தில்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை என்றுசுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தெரிவித்தார்.

இது தொடர்பாக  சென்னை தலைமை செயலகத்தில்  சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில்அம்மா அரசின் சார்பாக  எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் சார்பில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 30-ந்தேதி தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது என்றுசுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.