சென்னை : சமீபத்தில் திமுகவில் இணைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெகவில் தனக்கு மதிப்பு இல்லாததால் நிர்க்கதியாக நின்றபோது திமுக தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அஜிதா ஆக்னல், தவெகவில் பெண்களுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:“நீங்க அவங்க கிட்ட நீதி கேட்டா அங்க எங்க நடக்கப் போகுது? இது ஒண்ணுமே நீதியே நடக்காது. நீ தயவு செய்து நீ வெளிய போ ஏன் இன்னும் ஏமாந்துட்டே இருக்க இந்த இடத்துல? என பலரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாத ஒரு இயக்கம்.
இத்தனை வரைக்கும் பெண்களுக்கு இடம் குடுத்துருக்கீங்களே. எத்தனை பெண்கள் மக்கள் இயக்கத்திலிருந்து உழைச்சவங்க. கிட்டத்தட்ட நூத்தி இருபது, நூத்தி ஐம்பது சீட் குடுத்துருக்கீங்க. எத்தனை பேர் மக்கள் இயக்கத்துல உழைச்சவங்க. எத்தனை பேர் தமிழக வெற்றி கழகத்துக்காக அவங்க வேலை பார்த்தவங்க. எத்தனை பேருக்கு சீட் குடுத்துருக்கீங்க?ஊழல், ஊழல், ஊழல். காசு வாங்க மாட்டேன். காசு வாங்க மாட்டேன். நீங்கப் பதவியே காசு வாங்கி தாங்க போட்டீங்க. சீட் எடுத்துக்கோங்க. எல்லா சீட்டும் விற்பனை பண்ணப்பட்டது. அவ்ளோதான்.
நான் DMK கைக்கூலினா? அதுக்கு முந்தின நாள் வந்து அமைச்சரா இருந்த ஒருத்தர் வேற கட்சியிலிருந்து வந்து அங்க போறாங்க. அவங்களுக்கு சீட். பதினைஞ்சு, பதினைஞ்சு நாள் ரிமாண்ட் ஜாமீனில் வந்துருக்காங்க. அவங்களுக்கு சீட். கற்பழிப்பு வழக்கில் வந்துருக்காங்க. அவங்களுக்கு சீட்.நான் என்னங்க தப்பு பண்ணேன். ஏன் எனக்குக் குடுக்கல? எனக்கு முறையான காரணத்தை என்கிட்ட சொல்லுங்க. எல்லாருக்குமே வந்து பணத்தை வாங்கிட்டு தான் அவங்க சீட் குடுத்தாங்களே தவிர பணம் வாங்காம குடுக்கல.
நான் அவ்ளோ பெரிய இடத்துல இருந்து இறங்கிட்டு வந்துட்டேன். மக்கள் சேவை பண்ணப் போறனா உங்க சொந்த பணத்தை எடுத்து மக்களுக்குச் சேவை பண்ணுங்க. மத்தவங்கள்ட வாங்கி குடுக்கனும்னா அப்ப எத்தனை பேருக்கு நீங்க சீட்கு பணம் குடுத்துருக்கீங்க? Election செலவுக்கு எத்தனை பேருக்கு நீங்கப் பணம் குடுத்துருக்கீங்க? அதுவும் கிடையாது.ஆனா பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் பிறப்பால் அனைவரும் சமம் அப்படின்னாங்க. இதை நான் நிறைய இடத்துல நானே பேசி இருக்கேன்.
Reserve தொகுதியில யார் யாருக்கு reserve தொகுதின்னா அந்தத் தொகுதியில வந்து தனித் தொகுதின்னு அர்த்தம். அந்த இடத்துல யாரு இருக்காங்களோ அவங்களுக்கு தலித்துகளுக்கு நீங்கச் சாதாரண வந்து ஒதுக்கப்பட்ட தொகுதியில் மட்டும் தான் அவங்களுக்கு சீட் குடுத்துருக்கீங்கே தவிர, மத்தபடி மத்த இடத்துல வந்து open இதுல வந்து அவங்களுக்கு யாருக்குமே சீட் குடுக்கல.அப்ப எந்த விதத்துல சொல்றீங்க? சம வாய்ப்பு குடுத்துருக்கோம், சம உரிமை குடுத்துருக்கோம் அப்படின்னு. அதுவும் இந்த இடத்துல கிடையவே கிடையாது.
உழைத்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்துல எந்தப் பொறுப்புமே குடுக்கப்படல. இது தான் உண்மை. என்னைய மாதிரி இந்த ஒரு அஜிதா இல்ல. இதே மாதிரி ஆயிரக்கணக்கான பேர் உழைச்சுட்டு ஓரமா உக்காந்து இருக்காங்க.நான் இந்த இடத்துல வந்துருக்க அப்படின்னா எனக்கு எந்த விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்ல. ஏன்னா, நான் உண்மையா உழைச்சு இருக்கேன்.
நீங்க நான் இன்னைக்கு இந்த இடத்துல நீங்க எல்லாரும் கேக்குறாங்க. நீங்க வந்து மாவட்ட செயலாளர் பதவி குடுக்கல, சீட் குடுக்கல. அதனால நீங்கக் கட்சியை விட்டுப் போயிரலாமா அப்படின்னு.ஏன் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் எங்க இருந்து வந்துருக்கீங்க? எல்லா தலைவர்கள் மே வேற வேற கட்சியிலிருந்து வந்துருக்கீங்க. நீங்கப் பொறுப்பு குடுக்காம இருந்தீங்க. வந்தவுடனே உங்களுக்கு ஒரு பொறுப்பு. பொறுப்பு வாங்கிட்டு தான் வேலை பாத்துருக்கீங்க.எந்த ஒரு அரசியல் கட்சில வந்தாலுமே ஒரு பொறுப்புல இருந்தா தான் மக்கள் பணி செய்ய முடியுமே தவிர, பொறுப்புல இல்லாம யாருமே மக்கள் பணி செய்ய முடியாது. ஏன் நீங்க வந்தவுடனே முதல்வர் ஆகணும்னு நினைக்கிறீங்க? நீங்க நானூறு கோடி, ஐநூறு கோடி சம்பளம் வாங்குறீங்க. அது ஒரு trust ஆரம்பிச்சு அதுல மக்கள் பணி பண்ணுங்க.
ஏன் முதல்வர் ஆனாதான் மக்கள் பணி செய்ய முடியுமா? எதுக்கு முதல்வர் ஆகணும்னு நினைக்கிறீங்க?ஒரு அங்கீகாரம் இருந்தாதான் மக்களுக்குப் பணி செய்ய முடியும். அதே அங்கீகாரத்தை தான் நான் கேட்டேன். நான் கேட்டா நீங்க சீட் குடுக்கலாம். வேலை பார்க்க மாட்டீங்க. நீங்கப் பொறுப்பு குடுக்கலாம். வேலை பார்க்க மாட்டீங்க.என்னங்க பொறுப்புல இருந்தா தான் மக்கள் பணி செய்ய முடியுமே தவிர, பொறுப்புல இல்லாம யாருமே செய்ய முடியாதுங்க. அப்படின்னா அப்புறம் நீங்க யாருக்கும் candidate குடுத்துருக்கவே கூடாது. எல்லாத்தையும் trust ஆரம்பிச்சு trust குடுத்துருங்க. அந்த அளவுக்குத் தான் இப்ப இந்த கட்சி நிர்வாகம் இருக்கு.ஆனா நான் எந்தக் கட்சிக்கும் போகாம எல்லா கட்சிகளுக்கும் என்னை அழைப்பு விடுத்தாங்க. நான் போகல. ஆனா நான் வந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நான் வேலை பாக்கல. தமிழக வெற்றிக் கழகத்துக்காக வேலை பார்த்த ஒரு பெண்ணா இருந்து நான் நிராகரிக்கப்பட்டேன்.
ஆனா தாய் உள்ளத்தோட தலைவர் ஸ்டாலின் அவர்களும் சகோதரி உள்ளத்தோட கனிமொழி அம்மா அவர்களும் அண்ணன் உள்ளத்தோட அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டாங்க. இம்மா நீ இவ்ளோ உழைச்சு இருக்க உனக்கான அங்கீகாரத்தை, உன் இனத்துக்கான அங்கீகாரத்தை நாங்க குடுக்கிறோம். நீங்க என்கிட்ட வந்து வேலை பாருங்கன்னு நான் இந்த இடத்துலயும் சொல்றேன்.
நான் எந்தப் பணத்திற்காகச் சம்பாதிக்கணும், பணம் வாங்கணும் அப்படின்னு இந்த இடத்துக்கு நான் வரவே இல்ல. நான் அந்த அந்தக் கட்சியில கேட்டது ஒரே ஒரு விஷயம் தாங்க. எனக்கு மக்கள் பணி செய்யணும். எனக்கு ஒரு அங்கீகாரம் தாங்க. அந்த ஒரு விஷயத்தை தான் நான் கேட்டேன்.ஆனா நான் ஆயிரம் முறை இல்லைங்க. ஐயாயிரம் முறை நான் open ஆ சொல்லப்போனா பொதுச் செயலாளர் கால்ல விழுந்து நான் கேட்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க. எனக்கு இந்தக் கட்சியில ஒரு வாய்ப்பு குடுங்க. நான் உண்மையா உழைக்கணும்னு வந்துருக்கேன். எனக்கு வாய்ப்பு குடுங்க அப்படின்னு.ஆனா என்னை உதாசீனப்படுத்திட்டு இதுவரைக்கும் எனக்கு எந்த வாய்ப்புமே குடுக்கல.” எனவும் வேதனையுடன் அஜிதா பேசியுள்ளார்.
