எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், கிராமசபைக்கூட்டம் பெயரில் நாடகசபை கூட்டம் அரங்கேற்றம்.ஒற்றையாக அமர்ந்து ஓரங்க நாடகம்? என்றும் வரும்காலத்தில் ஓரங்கட்டப்படுவோம்? என்பதன்அறிகுறி ஆகும். 5முறை ஆண்ட திமுக ஊழல் ஆட்சி ஆகும் .ஏமாறாதீர் என எடுத்து சொல்வோம்.
அதேபோல் எதிர் கூட்டணியில் இல்லாதவர்கள் பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. மோடியை பிரதமராக்க உழைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.