தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு – தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

cleaning staff and mk stalin

தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் நலனுக்காக முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. இன்று (அக்டோபர் 24, 2025) வெளியான அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும். இது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது.அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.

காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரிச், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். சென்னை மாநகராட்சி, இதற்கான உணவகங்களை அமைத்து, பணியாளர்களின் பணி நேரத்துடன் ஒத்திசைவாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தத் திட்டம், தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் இலவச உணவு திட்டம், புதிய சாதனை. தூய்மை பணியாளர்கள், நகர சுத்திகரிப்பில் முக்கிய பங்காற்றுபவர்கள் என்று அரசு அங்கீகரித்து, அவர்களுக்கு மாத ஊதிய உயர்வு, காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தியது போல, இப்போது உணவு உத்தரவாதம் அளிக்கிறது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் “தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node