ஹெச்.ராஜாதான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ் மறைவை அடுத்து காலி என அரசிதழில் வெளிடப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் திருவாரூர் தொகுதியும் திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் இந்த இரு தொகுதிகளையும் தமிழகத்தின் முக்கிய காட்சிகள் தற்போதை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக,அமமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என்று இந்த காட்சிகள் மாறிமாறி கூறிவருகின்றது.
unknown nodeஇந்நிலையில் இன்று மதுரையில் இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையயில் , “அதிமுக திருப்பரங்குன்றத்தில் நிற்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஹெச்.ராஜாவுக்கு சீட் தரப் போகின்றனர். எனவே ஹெச்.ராஜாதான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் என்று அதிரடியாக கூறியுள்ளார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.