உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உள்ளாட்சி சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என தெரியவருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.