திமுக மகளிரணிச் செயலாளரும் , தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 52-வது வயதில் கால் அடியெடுத்து வைத்துள்ளார்.இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கனிமொழி கடந்த இரண்டு ஆண்டுகளாக ( கருணாநிதி மறைவுக்கு பின் ) தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறைத்து கொண்டார். இதனால் கனிமொழி தனது பிறந்தநாள் அன்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு,பின்னர் தனது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வருகிறார்.
எம்.பி கனிமொழி தனது தந்தை கருணாநிதி இறந்த பிறகு தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடுவதை தவித்து கொள்ளுமாறு ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பே கனிமொழி அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…