டோக்கன் செல்வன் டிடிவி.தினகரன்...!எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய ரெடியா ...!மறுபடி வெற்றி பெற முடியுமா ...!அமைச்சர் ஜெயக்குமார் சவால்

டோக்கன் செல்வன் என்று  அழைக்கப்படும் டிடிவி.தினகரன், முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.

டோக்கன் செல்வன் என்று  அழைக்கப்படும் டிடிவி.தினகரன், முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளளார்.அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் இன்று ஆகும்.இன்றோடு அதிமுகவிற்கு 47 ஆண்டுகள் ஆகின்றது.இதன் துவக்க விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

unknown node

இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிச்சாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்கள்.

unknown node

இதில் அதிமுகவின் அமைச்சர்களும் உட்பட பலர்  கலந்து கொண்டார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,டோக்கன் செல்வன் என அழைக்கப்படும் டிடிவி.தினகரன், முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் .அதேபோல் தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா? என சவால் விடுத்துள்ளார்.மேலும் தினகரனால் எதுவும் செய்ய இயலாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.