தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை தலைமையேற்று நிர்வாகி அருண்ராஜ் வழிநடத்தி வருகிறார். பொதுக்கூட்டங்களில் நடிகர் விஜய் ஏற்கனவே சில முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், முழு தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் அறிக்கை வெளியீட்டு தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள விஜயின் பரப்புரைக் கூட்டத்திற்குப் பிறகு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மார்ச் 4 அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.தஞ்சையில் மார்ச் 4-ஆம் தேதி த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை செங்கிப்பட்டியில் நடத்த அனுமதி கோரி த.வெ.க நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பான இறுதி ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.த.வெ.க தலைவர் விஜய் தற்போது பல்வேறு மாவட்டங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படியான சூழலில், த.வெ.க தேர்தல் அறிக்கை மார்ச் முதல் வாரத்திலேயே வெளியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மார்ச் 4-ஆம் தேதி தஞ்சை கூட்டத்திற்குப் பிறகு அல்லது அதே நாளில் அறிக்கை வெளியீடு நடைபெறலாம் என்று கட்சி வட்டாரங்கள் உறுதியளிக்கின்றன. இது தமிழக அரசியலில் த.வெ.க-வின் முதல் முழு தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
