டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், கதிர்காமு உள்ளிட்டவர்கள் கருணாஸை சந்தித்துள்ளனர்.தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.
unknown nodeகடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்கருணாஸ்அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், மண்டல பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன்(சட்டமன்ற உறுப்பினர்), கழக அம்மா பேரவை செயலாளர், மண்டல பொறுப்பாளர் மாரியப்பன் கென்னடி(சட்டமன்ற உறுப்பினர்),கதிர்காமு(சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்டவர்கள் சந்தித்துள்ளனர்.ஏற்கனவே கருணாஸ் பேசியதற்கு தினகரன் தான் காரணம் என்று கேள்வி எழுந்து வந்தது.இந்நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மரியாதை நிமிர்த்தமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.