திருவாரூர் :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், இன்று திருவாரூரில் மக்கள் சந்திதார். இந்தப் பயணம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்று, பின்னர் திருவாரூக்கு 3 மணி அளவில் வருகை தந்தார்.
திருவாரூர் தெற்கு வீதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இதற்காக 25 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. திருவாரூர் பரப்புரையின்போது தவெக தலைவர் விஜய், தொண்டரின் குழந்தைக்கு சந்தன மாலை அணிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய்க்காக பேருந்து பின்னாடியே ஓடிவந்து பழங்கள் கொடுத்தனர்.
குறிப்பாக வரும் நிலையில், விஜய்க்கு கிரைன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனை, வாகனத்தின் மீது ஏறி அதனை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்யவுள்ள இடத்திற்கு மீண்டும் புறப்பட்டார்.
காணும் காட்சி கடவுள் காட்சியடா 🙏🏼 pic.twitter.com/rzfgIIdv2A
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 20, 2025
