சென்னை :தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். விஜய்யின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது 2026 தேர்தலை நோக்கிய முதல் கட்ட சுற்றுப்பயணமாகும். விஜய் வார இறுதிகளில் (குறிப்பாக சனிக்கிழமைகளில்) மக்களைச் சந்தித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார். ஆம், வார இறுதிநாளான சனிக்கிழமை மட்டுமே மக்களை சந்தித்து பரப்புரை செய்கிறார்.
அதன்படி, வருகின்ற செப்டம்பர் 13-ஆம் நாள் திருச்சியில் தொடங்கும் அவரது பயணம் டிசம்பர் மாதம் 20-ஆம் நாள் மதுரையில் முடிகிறது. அக்.4 கோவை, அக். 11 நெல்லை, அக்.18 காஞ்சிபுரம், அக்.25 சென்னையில் விஜய் பரப்புரை செய்ய உள்ளார்.
