சென்னை :நேற்றைய தினம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு மக்கள் சந்திப்பு அரசியல் பயணம் மேற்கொண்டு திரும்பிய விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில், ”நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ”அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம். இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாளர்களைச் செய்தோர் செய்தோர், நம்மை கண்டு அஞ்சுகின்றனர். மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு சிலர் அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை விதிக்கின்றனர்.
இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node