கரூர் செல்லாதது ஏன்? – காரணத்தை விளக்கிய தவெக விஜய்.!

பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை, என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்

TVK Vijay

சென்னை :கரூரில் கடந்த செப்டம்பர் 27அன்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த பெரும் துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நேரடியாக சென்று மக்களை பார்க்காவிட்டாலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, சில அரசியல் தலைவர் சம்பவம் நடந்து கரூர் சம்பவத்திற்கு மூன்று நாட்கள் கழித்து, இது தொடர்பாக விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். தன் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை இதுவரை எதிர்கொண்டதில்லை என்றும் நடக்க கூடாத சம்பவம் நடந்துவிட்டதாகவும் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் ஏன் கரூருக்கு செல்லவில்லை என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், ”மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க.

பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை, என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை. இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம், இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம்.

மீண்டும் பிரச்னை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூருக்கு செல்லவில்லை, மக்கள் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள கூடாது என்ற எண்ணத்துடனேயே செயல்பட்டு வந்துள்ளேன். கூடிய விரைவில் மக்கள் அனைவரையும் சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.