சென்னை :தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர், ”ஜி.கே.மூப்பனார் பிரதமராக முடியாமல் தடுத்தவர்கள் யார் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்றும், இன்று தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள், ஒரு தமிழரை பிரதமராக விடாமல் தடுத்தனர் என்றும் பேசினார்.
குறிப்பாக விழா மேடையில், எதிரும் புதிருமாக இருந்துவந்த அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் அருகருகே அமர்ந்திருந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, NDA தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார்.
சமீபத்தில் ஜெ.,வுடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அதிமுக கூட்டணி தலைவர்களுடன் ஒன்றாக எல்.கே.சுதீஷ் அமர்ந்திருக்கிறார். இது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
