ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்...!பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...!

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக பொறுப்பேற்க  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக பொறுப்பேற்க  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது.அதில்  ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக பொறுப்பேற்க  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யவில்லை எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும். பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவது சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்து டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கை  ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.