அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சர்கார் திரைப்படத்தில் விலையில்லாமல் கொடுக்கிற பொருட்களை விபரீதமாக சித்தரித்து மக்களிடத்தில் விஷத்தை தூவுவது தவறான செயல் ஆகும்.ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் இருந்தார்கள்.அதேபோல் அன்றே இலவச திட்டங்களை விஜய் ஆதரித்தார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.