விஜய் அரசியல் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!

சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல்

Vijay MK Stalin

சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்ற மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார்.

கட்சி தொடங்கிய விஜய்-க்கு நடிகர் ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை.!

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,”மக்கள் தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.