வயநாடு நிலச்சரிவு...மிகவும் வருத்தமடைந்தேன்-தவெக தலைவர் விஜய்!!

கேரளா : நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையாக பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள்

vijay

கேரளா :நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையாக பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கேரளாவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்து மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவித்தார்.

அதே போல ராகுல் காந்தி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சோகச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.