முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு.? காரணம் என்ன?

மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளது. இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க தவெக திட்டமிட்டுள்ளனர்.

TVK Madurai Manaadu

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் கடுமையான வெயில் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தவெகவின் 2 ஆவது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளது. இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக 4 மணிக்கு மாநாட்டைத் தொடங்க திட்டமிட்டிருந்தனர், ஆனால் மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொண்டர்கள் நிழலைத் தேடி நாற்காலிகளுடன் செல்வதாகவும், மாநாடு நடைபெறும் இடத்தில் உரிய வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஏற்பட்ட சிரமங்களை (வெயில், உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல்) கருத்தில் கொண்டு, தொண்டர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் இருக்கவும், மாநாட்டை பிற்பகல் 3 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.