வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்திய வானிலை மையம் முக்கிய தகவல்!

லகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

TN Rains alert

சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியங்கள், அக்டோபர் 16 முதல் 18 வரை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. பொதுவாக அக்டோபர் மத்தியில் தொடங்கும் இந்த மழை, இந்த ஆண்டு சற்று தாமதமாகலாம் என்றாலும், குறிப்பிட்ட தேதிகளில் தீவிரமாகத் தொடங்க வாய்ப்புள்ளது. இது தென்னிந்தியாவின் விவசாயம், நீர் ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய சம்பவமாகும். IMD-வின் நீண்டகால கணிப்பின்படி, அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சாதாரணத்தை விட 112% அதிக மழை பெய்யும்.

எனவே, எப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியங்கள், அக்டோபர் 16 முதல் 18 வரை நிலவும் என தெரிவித்துள்ளது.

மேலும், 10-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைப்போல, 11-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.