தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியவில்லை...Disaster மாடல் ஆட்சி – நயினார் சாடல்!

பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தரன் பாடலை பாடியுள்ளார்.

nainar nagendran BJP

நெல்லை :ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அப்போது “அமித்ஷா தமிழகம் வந்திருக்கும் இந்த நாள் நிறைந்த அமாவாசை. இது பாஜகவினருக்கு களப்பணிகளை தொடங்க சரியான நேரம்,” என்று கூறி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், “திமுக ஆட்சியில் 10 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர் வரை பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. லாக்கப்பில் ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டு, முதல்வர் சாதாரணமாக ‘சாரி’ என்கிறார். மக்கள் இதை Disaster மாடல் ஆட்சி என்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.நயினார் நாகேந்திரன் மேலும் கூறுகையில், “திமுக ஆட்சி குடும்ப ஆட்சியாக உள்ளது. ஆனால், பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போர்,” என்று வலியுறுத்தினார்.

திமுகவின் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலையை விமர்சித்தார்.அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்த நயினார், “சிலர் கவர்ச்சிகரமாக கட்சியை ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி 2026 தேர்தலில் நிச்சயமாக வெல்லும்,” என்றார். திமுகவின் கூட்டணி அரசியலை கேள்வி கேட்ட அவர், “பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது அது சந்தர்ப்பவாதமாக தெரியவில்லையா? இப்போது எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார்கள்,” என்று குற்றம்சாட்டினார்.

மாநாட்டில், பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, 2026 தேர்தலுக்கு தயாராகும் உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமித்ஷாவின் தமிழக வருகையை மையப்படுத்தி, களப்பணிகளை தீவிரப்படுத்தவும், மக்கள் மத்தியில் பாஜகவின் கொள்கைகளை எடுத்துச் செல்லவும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த மாநாடு, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.