ரஷ்யாவின் ஒரு பள்ளியில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய ரஷ்யாவில் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள சுமார் 1000 பேர் படிக்கும் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கே தாறுமாறாக துப்பாக்கிச்சூடு நடத்தினார் பின்னர் அவர் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
அவர் சுட்டதில் ஏழு குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது, துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தரையில் இறந்து கிடந்தார். தரை முழுவதும் ரத்தமாக இருந்தது என்று கூறியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.