அமெரிக்காவில் வீசிய பலத்த சூறாவளி காற்று.! 15 பேர் பலி.!

அமெரிக்கா : தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்.

roars through Texas,

அமெரிக்கா :தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பல மாநிலங்களை சூறாவளி மற்றும் பிற தீவிர புயல்கள் தாக்கியதில் மத்திய அமெரிக்காவில் 15 பேர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீச தொடங்கிய சூறாவளி வீசியதன் காரணமாக, அமெரிக்காவின் பல தென் மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  புயலால் பாதிக்கப்பட்ட டல்லாஸ் நகரத்திற்கு வடக்கே டெக்சாஸின் டென்டன் கவுண்டியில் உள்ள ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், இந்த புயல் காரணமாக பல பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது மட்டுமல்லாமல், சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.  தற்பொழுது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.