உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.76 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணம் ஆகியவர்க ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.
நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரானா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 17,476,105 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10,939,473 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 287,146 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 6,426 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 5,855,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.