"இந்தியா என்னை ஏமாற்றமைடைய செய்தது" – அதிபர் ட்ரம்ப்.!

பிரதமர் மோடியைப் பாராட்டிய டொனால்ட் டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

DonaldTrump - pm modi

லண்டன் :நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்குள்ள நெருங்கிய உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதை அவர் எடுத்துக்காட்டினார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ”பிரதமர் மோடியுடன் எனக்கு நெருங்கிய உறவு இருக்கிறது, அவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வாழ்த்துகூட தெரிவித்தேன்.

இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியது என்னை ஏமாற்றமடைய செய்துவிட்டது, அமெரிக்காவுடன் நியாயமாக நடந்துகொள்ளாததால் இந்தியா மீது இறக்குமதி வரிகளை விதித்தேன். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை நானே நிறுத்தினேன்” என்று கூறினார்.

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவை மீண்டும் மீண்டும் விமர்சித்ததற்கும், வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியதற்கும் பிறகு, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபரின் இந்த பாராட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.