உலகம்

அடேங்கப்பா…! ஆரம்ப விலை ரூ.42 லட்சம்…அதிர வைத்த ஆப்பிள் நிறுவனம்.!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், ஒரு காலத்தில் ஒரு சிறப்பான ஸ்னீக்கர்களை உருவாக்கியது. இந்த ஸ்னீக்கர்கள் 1990-களின் நடுப்பகுதியில் ஆப்பிள் ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. ஆனால், அவை பொதுமக்களுக்கு விற்கப்படவில்லை. 1985 ஆம் ஆண்டில் 22,000 க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஊழியர்கள் இந்த பிராண்டிலிருந்து ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கியுள்ளனர். இப்போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தனித்துவமான ஆப்பிள் ஸ்னீக்கர்களை பெறுவதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆப்பிள் லோகோ கொண்ட அந்த வெள்ளை […]

3 Min Read
Apple-Made Sneakers

கட்டுக்கடங்காத கிரீஸ் காட்டுத் தீ: விமான விபத்தில் 2 பேர் பலி!

கிரீஸில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்ட பெரிய அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால், அருகருகே இருக்கும் ரோட்ஸ் தீவு, கோர்பு தீவு ஆகிய இடங்களை தொடர்ந்து எலியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அணைப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று விமானம் மூலம் தண்ணீரை கொட்டும் பணி நடைபெற்றது. அப்போது, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் இருந்த கேப்டன் மற்றும் துணை […]

2 Min Read
Greece forest fires

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவை ஊக்குவிக்கிறோம்..! ஐஎம்எப்

ஐஎம்எப், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது. பாசுமதி அல்லாத வேகவைத்த அரிசி மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று உணவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. இதன்பின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார நிபுணர் பியர்-ஆலிவியர் […]

4 Min Read
NonBasmatiWhiteRice

தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா! பதிலடி கொடுத்த வடகொரியா!

அமெரிக்காவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவை வந்தடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட கொரியா நேற்று பிற்பகுதியில் அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளதாக தென் கொரியாவின் இராணுவம் கூறியுள்ளது. சமீப காலமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுதல்கள் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.  வட கொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள நீரில் […]

3 Min Read
Two ballistic missiles

ட்விட்டர் எக்ஸ் என பெயர் மாற்றம்; புதிய சிக்கலில் எலான் மஸ்க்.!

எக்ஸ் என்ற பெயரில் ட்விட்டர் மாற்றப்பட்டதை அடுத்து, அந்நிறுவனம் புதிய சட்டசிக்கலுக்கு உள்ளாகும் என தகவல். எக்ஸ் X என்ற எழுத்திற்காக மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை வைத்துள்ளதால், ட்விட்டர் நிறுவனம் எக்ஸ் என புதிதாக பெயர் மாற்றம் செய்துள்ளதால், எலான் மஸ்க் புதிய சட்ட சிக்கலை எதிர்கொள்ளக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2003 முதல், எக்ஸ்பாக்ஸ் (Xbox) வீடியோ-கேம் சிஸ்டம் பற்றிய தகவல்தொடர்புகள் தொடர்பான X […]

4 Min Read
TwitterX Musk

எக்ஸ் என பெயர் மாற்றம்; ட்விட்டர் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழப்பு என தகவல்.!

எலான் மஸ்க், ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றியவுடன் அதன் மதிப்பு 1.63 லட்சம் கோடி இழக்கிறது என ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் நீலநிறப்பறவை சின்னமும் நீக்கப்பட்டு X என்ற எழுத்தாக மாற்றப்பட்டதன் விளைவாக, ட்விட்டரின் நிகர மதிப்பு 4 பில்லியன் டாலர் (ரூ.32,724 கோடி) மற்றும் $20 பில்லியன் (ரூ.1.63 லட்சம் கோடி) மதிப்பை இழந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய எலான் மஸ்க் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி […]

2 Min Read
Twitter X

3.2 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை 44வது மாடியில் பார்க் செய்த சீன கோடீஸ்வரர்..!

சீன கோடீஸ்வரர் ஒருவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை 44 வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார். சீனாவின் புஜியான் மாகாணத்திம் ஜியாமென் நகரில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவர் தான் வாங்கிய ரூ.3.2 கோடி மதிப்பிலான தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரை, தான் வசிக்கும் பென்ட்ஹவுஸின் 44 வது மாடியின் பால்கனியில் கொண்டு சென்று பார்க்கிங் செய்துள்ளார். அதன்படி, சுமார் 170 மீட்டர் உயரத்திற்கு உள்ளூர் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த […]

3 Min Read
Rolls-Royce

சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி ஓடிய நிலையில் […]

3 Min Read
GymCollapsed

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 26 பேர் உயிரிழப்பு..! 40 பேரைக் காணவில்லை..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாவும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி கூறுகையில், வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் வெள்ளத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், திடீரென […]

3 Min Read
AfghanistanFloods

ரஷ்ய வணிக வளாகத்தில் சுடுநீர் குழாய் வெடித்ததில் 4 பேர் பலி, 10 பேர் காயம்..!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் 150 கடைகள் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சூடான தண்ணீர் குழாய் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.

2 Min Read
HotWaterPipeBurst

இந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..! அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்…!

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம். பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் அறிவிப்பை தொடர்ந்து ‘Panic Buying’ என கூறப்படும் வகையில், அமெரிக்காவின் பல்வேறு சூப்பர் மார்கெட்களில் நீண்ட வரிசையில் நின்று, பல மாதங்களுக்கு தேவைப்படும் […]

3 Min Read
white rice

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்து ஹெலிகாப்டர்! சம்பவ இடத்திலேயே சோகம்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த 3 பணியாளர்கள் களப்பணிக்காக சென்றபோது இந்த விபத்து நடந்தது. இந்நிலையில், விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
helicopter

ஐயோ ஏசி இல்லை! வெப்பத்தால் விமானத்தில் மயக்கமடைந்த மக்கள்.!

ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இத்தாலியின் மிலனுக்குச் சென்று கொண்டிருந்த ரியானேர் விமானம் ஏர் கண்டிஷர் இல்லாமல் 3  மணி நேரத்திற்கும் மேலாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் மத்தியில் இருந்துள்ளது. வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் மயக்கமடைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பிறகு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு  வலியுறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர்.

2 Min Read
Italy-bound flight

கருங்கடலில் கப்பல்களை தாக்கும் ரஷ்யா..! ராக்கெட்டுகளை ஏவி பயிற்சி..!

ரஷ்ய கடற்படை கருங்கடலில் கப்பல்களை நோக்கி ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை, கடலின் மேற்பகுதியில் உலாவும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்குச் செல்லும் பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி, பின்னர் உக்ரைன் படைகள் மீது பழி சுமத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரித்தது. மேலும், உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா கூடுதல் கடல் கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக அமெரிக்க […]

3 Min Read
Russian Navy

வரலாறு காணாத வெயிலால் திணறும் உலக நாடுகள்! வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!

வெப்ப அலை தாங்கா முடியாமல், உலக நாடுகள் தவித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வீசிவரும் வெப்ப அலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும்  நீரூற்றுகளில் குளிர்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர். வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாவதால், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டை விட்டு […]

2 Min Read
heat in Italy

‘மூளையை தின்னும் அமீபா’ – பரிதாபமாக உயிரிழந்த 2 வயது சிறுவன்…!

அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற மூளையை தின்னும் நோய் தாக்கிய நிலையில் உயிரிழப்பு.  அமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை மூளையை தின்னும் அரியவகை நோயான அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நீர்நிலைகளில் வாழும் அமீபா மூலம் இந்த மூளையை தின்னும் அரியவகை அமீபா என்ற நோய் பரவுகிறது. இந்த நோய் என்பது நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை தாக்கும். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று […]

3 Min Read
baby

வீடியோ பார்க்கவில்லை… எங்கள் இதயம் உடைந்துவிடும்.! மணிப்பூர் கலவரம் குறித்து அமெரிக்க தூதர் கருத்து.!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கருத்து தெரிவிக்கையில், உலகில் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எங்கள் இதயம் உடைந்துவிடும் என தெரிவித்தார்.  கடந்த மே மாதம் ஆரம்பித்த மணிப்பூர் கலவரமானது நேற்று முன்தினம் வெளியான விடியோவால் பலரது நெஞ்சத்தை பதறவைத்துள்ளது. அங்குள்ள மற்ற மக்களின் நிலை என்ன என திகைக்க வைத்துள்ளது. இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து செல்லும் காட்சி அந்த விடீயோவில் பதிவாகி பலரது இதயத்தை கனக்க வைத்துவிட்டது. இந்த […]

3 Min Read
Eric Garcetti, US Ambassador to India

நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்து – ஒருவர் பாலி, 41 பேர் படுகாயம்!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாவட்டத்தில் நேற்று மாலை பொழுதில், நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது வெடிப்பு ஏற்படக்கூடும் என்று சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்த முதற்கட்ட விசாரணையில் எரிவாயு வெடிப்புக்கான காரணம் என்னெவென்று கண்டறியப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது.

2 Min Read
Underground gas explosion

கருங்கடலில் பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி உக்ரைன் மீது பழி சுமத்தலாம்..! அமெரிக்கா

கருங்கடலில் உள்ள பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி, பின்னர் உக்ரைன் படைகள் மீது பழி சுமத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா கூடுதல் கடல் கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளிடம் தகவல் உள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார். கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Merchant ships

கொலம்பியாவில் விமானம் விபத்து: 5 அரசியல்வாதிகள் பலி!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 அரசியல்வாதிகள் உயிரிழந்தனர். மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் விமானி என 6 பேர் உயிரிழந்தனர். இவர்கள் முன்னாள் கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ உரிபேவின் கட்சியைச் சேர்ந்தவர்கள். கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விலாவிசென்சியோவில் இருந்து பொகோட்டாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி […]

2 Min Read
Plane Crash In Colombia