பாகிஸ்தான் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

Yesterday, two Pakistan Express trains collided head-on with each other. The death toll from the crash has risen to 63.

நேற்று பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும்  எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில்  500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள தார்கி என்ற இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டதால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து உள்ளது.

அதே சமயம், அருகில் உள்ள தண்டவாளத்தில் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலுடன் மில்லட் ரயிலின் பெட்டிகள் மோதியதில் இரு ரயில்களும் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் மில்லட் ரயிலில் இருந்த 14 பெட்டிகள் கவிழ்ந்ததால் பல பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதல் கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.மேலும், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 13 அதிகரித்து மொத்தம் 63 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது