மீட்கப்பட்ட 147-இல் 86 புலிகள் இறந்துவிட்டன! புலிகளை வளர்த்த கோயில் நிர்வாகம் கடும் கண்டனம்!

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல அங்குள்ளவர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் அந்த குறிப்பிட்ட புத்தர் கோயிலை சுற்றுலாவாசிகள் புலிகள் கோவில் என்றே அழைக்கபடுகின்றன.

unknown node

இந்த காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க புலிகள் முறைகேடாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் அப்புலிகளை தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர் என குற்றம் கூறி தாய்லாந்து அரசு அப்புலிகளை மீட்டு வனக்காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.

மொத்தமாக 147 புலிகள் வன காப்பகத்தில் விடப்பட்டன. இதில் 86 புலிகள் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டன. வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதன் காரணாமாக புலிகள் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு புத்தர் கோயில் நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.