இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்! அப்படி என்ன உள்ளது?

The Italian company 'Borini Milanese' has made the most expensive women's handbag in the world. The hand packing price is Rs 53 crore.

இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம்  உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்.

பொதுவாக பெரும்பாலான  செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது  வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர்.  இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம்  உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம்  இதுபோன்று 3 கைப்பையை செய்துள்ளது.

இந்த நிறுவனம், ஒவ்வொரு பையையு தயாரிக்க ஆயிரம் மணி நேரம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் இதுகுறித்து, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மக்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூல கிடைக்கும் பணத்தில், ரூ.7  கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்.’ என பதிவிட்டுள்ளது.

இந்த கைப்பையில், பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில்,  10 தங்க பட்டாம்பூச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் வைரங்கள், அரியவகை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.