சுற்றுலா பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 45 பேர் பலி!

At least 45 people, including children, have been killed in a tourist bus crash in Bulgaria.

பல்கேரியா நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகியத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகியுள்ளனர்.

பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சோபியா எனும் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்துக்கு பின் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

மேலும் 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனால் விபத்து அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பல்கேரியா இடைக்கால பிரதமர் ஸ்டெபான் யானேவ் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.