பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு...!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2-வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக கவனிக்க உள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டுறவு துறையை கூடுதலாக கவனிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.