குட்நியூஸ்...!இந்தியாவில் மீண்டும் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...!

In India, 51,667 people have been infected with a coronavirus in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,183 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,83,143 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,01,83,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,183 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,94,493 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,818  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,95,565 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 31,50,45,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.