அதிர்ச்சி...பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!

Shock ... AIADMK ex-MLA manickam joins BJP!

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்,பாஜகவில் இணைந்துள்ளார்.திருப்பூரில்இன்றுநடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில்பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைஅவர்கள் முன்னிலையில்,மாணிக்கம் அவர்கள் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பேசி வரும் நிலையில்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு,அதிமுக பிளவுபட்டபோது,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு அளித்தவரும்,அதிமுக வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த 11 உறுப்பினர்களில் ஒருவருமானசோழவந்தான் தொகுதிமுன்னாள்எம்.எல்.ஏமாணிக்கம்பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி...பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்!