தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு இது தான் காரணம்...! – அன்வர் ராஜா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா, அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றும்தான் அதிமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால் தான் அதிமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் நேரத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். அப்படி அவர்கள் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர். எனவே தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.