CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK - SRH ஐபிஎல் மேட்சை காண நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajithkumar watch CSK match today

சென்னை: இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் Do or Die போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

அதனை கூடுதல் பரபரப்பாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார். இதுவரை தனது பட ஷூட்டிங், தான் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் என்று மட்டும் பொதுவெளியில் வந்த அஜித்குமார், இந்தமுறை தனது குடும்பத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் கிரிக்கெட் போட்டியை காண சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளார்.

தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உடன் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். பொதுவெளியில் வராத அஜித்குமார் முதல் முறையாக கிரிக்கெட் மேட்ச் பாரக்க வந்துள்ளதால் மைதானத்தில் ரசிகர்கள் AK கிரிக்கெட் பார்க்கும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும், மைதானத்தில் CSK கேப்டன் ‘தல’ எம்.எஸ்.தோனி என்ட்ரி ஆகும் போது அஜித் அதனை காணும் வீடியோக்கள் என பல்வேறு வீடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown node