துபாய் :ஆசியக்கோப்பை 2024 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், செப்டம்பர் 21, 2025 அன்று டுபாய் அரங்கத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.
இலக்கை துரத்திய இந்தியா 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் (74 ரன்கள் , 39 பந்துகள்) மற்றும் திலக் வர்மா (30*ரன்கள், 19 பந்துகள்) முக்கிய பங்காற்றினர். போட்டி முடிந்த பின், இந்திய வீரர்கள் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் வெளியேறினர், இது குரூப் போட்டியின் போல் சர்ச்சையை தூண்டியது.
போஸ்ட்-மேட்ச் பிரசன்டேஷனில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியா-பாகிஸ்தான் மோதலை ‘ரைவல்ரி’ என்று கூறக்கூடாது என்று சிரித்தபடி கூறினார். “முதலில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரைவல்ரி என்கூறாதீர்கள். இரு அணிகளும் 15-20 போட்டிகளில் 7-7 அல்லது 8-7 என்று வென்றிருந்தால் அப்படிச் சொல்லலாம். ஆனால், 10-1 அல்லது 10-0 என்று இருந்தால் அது ரைவல்ரி ஆகுமா? அதனால், இனிமே இது ரைவல்ரி அல்ல (சிரிக்கிறார்),” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் 10 போட்டிகளில் 9 வெற்றிகள் என்ற ஸ்கோர்லைன், சூர்யகுமாரின் கருத்தை வலுப்படுத்தியது. இந்த வெற்றி, இந்திய அணியை சூப்பர் 4-இல் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்க வைத்தது. இலங்கை 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 0 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தாழ்ந்தது.
மேலும், இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஷிவம் துபே 2 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் பங்களாதேஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
