அபுதாபி :2025 ஆசிய கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி இன்று வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.டாஸ் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும், போட்டி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கும் தொடங்கும். ஹாங்காங் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மறுபுறம், வங்கதேசம் இன்று போட்டியில் தனது முதல் போட்டியை விளையாடும். நடப்பாண்டு ஆசிய கோப்பையில் வங்கதேசம் அபாரமான ஃபார்மில் களமிறங்குகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான அணி சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான டி20 தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஹாங்காங்-ஐ விட வலுவாக காணப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் வங்கதேசம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.
கடந்த 2014ல் டி20 உலகக் கோப்பையில் ஹாங்காங் அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. வங்கதேசம் இதுவரை அபுதாபியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆண்டு வங்கதேச அணிக்காக தஞ்சித் ஹசன் (23) மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் (22) ஆகியோர் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
நேற்றைய தினம் (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 தொடரின் தொடக்கப் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி, தனது முதல் போட்டியை வெற்றிகரமாக தொடங்கியது.
பங்களாதேஷ் அணி:
பர்வேஸ் ஹொசைன் எமோன், தஞ்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தௌஹித் ஹ்ரிடோய், சைஃப் ஹசன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்துல் முகமது, சஃதுன் அஹமது ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷமிம் ஹுசைன், தன்சிம்
ஹாங்காங் அணி:
ஜீஷன் அலி (கீப்பர்), அன்ஷுமன் ராத், பாபர் ஹயாத், நிஜாகத் கான், கல்ஹான் சல்லு, கிஞ்சித் ஷா, யாசின் முர்தாசா (கேப்டன்), அய்ஜாஸ் கான், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, அதிக் இக்பால், ஷாஹித் வாஸிஃப், மொஹம்மத் வாசிஃப், நஸ்ஹம்மத் வாசிஃப் வஹீத், மார்ட்டின் கோட்ஸி, அலி ஹசன்.
