ஆசிய கோப்பை: இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்!

ஆசிய கோப்பையின் 9வது போட்டியில் இன்று செப்டம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும்.

Afganistan vs Bangladesh

அபுதாபி :இன்றைய தினம் ஆசிய கோப்பை போட்டியின் ஒன்பதாவது போட்டி வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் வங்கதேசம் (BAN) மற்றும் ஆப்கானிஸ்தான் (AFG) இடையே இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

கடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி வங்கதேசத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆப்கானிஸ்தான் குரூப்-பி-யில் ஒரு போட்டியில் விளையாடியுள்ளது மற்றும் சிறந்த ரன் ரேட் காரணமாக இரண்டாவது இடத்தில் உள்ளது

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி 10 போட்டிகளில், ஆப்கானிஸ்தான் முன்னிலை வகித்துள்ளது, ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, வங்கதேசம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அணிகள்:

வங்கதேசம்:

பர்வேஸ் ஹொசைன் எமன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (w/c), தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், சைஃப் ஹஸ்ஹம், நயிஃப் ஹஸ்ஹம் நூருல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம்

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (wk) , செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷித் கான் (c), நூர் அகமது, ஏஎம் கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, மஹ்மத் ரஹ்மத், மஹ்மத் ரசூலி, இஷாக், ஷராபுதீன் அஷ்ரப், குல்பாடின் நைப், அப்துல்லா அஹ்மத்ஸாய்