#IPL2022: வெளுத்து வாங்கிய கில்.. வெற்றிபெறுமா டெல்லி கேபிட்டல்ஸ் அணி?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட் – ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் முதல் ஓவரில் 1 ரன் மட்டும் அடித்து மேத்யூ வேட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கினார்.
பொறுமையாக ஆடிவந்த விஜய் சங்கர், 20 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த ஷப்மன் கில், சிறப்பாக ஆடத்தொடங்கினார். அவருடன் ஹர்திக் பாண்டியா இணைய, இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மலமலவென உயர்ந்தது. பின்னர் பாண்டியா 31 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, 6 பவுண்டரி, 4 சிஸ்ஸர்கள் அடித்து ஷப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ராகுல் தேவாதியா 14 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தனர். 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்கள், கலீல் அஹமது தலா 2 விக்கெட்கள் மற்றும் குலதீப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025