கில், ஷ்ரேயாஸ் ஐயர் எப்படி இருக்கிறார்கள்? மோர்ன் மார்க்கெல் முக்கிய தகவல்!

கவுகாத்தி டெஸ்டுக்குப் பிறகு இந்திய கேப்டனுடன் உரையாடியதாகவும், விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மோர்ன் மார்க்கெல் தெரிவித்தார்.

shreyas iyer and gill

டெல்லி :இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கேப்டன் சுப்மன் கில்லும் முக்கிய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் இருந்து நன்றாகக் குணமடைந்து வருகிறார்கள். இந்திய அணியின் போலிங் கோச் மோர்ன் மார்க்கெல் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.சுப்மன் கில்லுக்கு கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது கழுத்தில் அடி ஏற்பட்டது. அதனால் அவர் போட்டியை விட்டு வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது சிறுகுடலில் (spleen) கீறல் ஏற்பட்டது. இருவரும் இப்போது தென்னாப்பிரிக்கா ODI தொடரில் விளையாட முடியாத நிலையில் ஓய்வு எடுத்து வருகிறார்கள். ராஞ்சியில் நாளை (நவம்பர் 30) தொடங்கும் முதல் ஒராட்டு ஒருநாள் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கெல், “சுப்மன் கில்லுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். அவர் ரொம்ப நன்றாக குணமாகி வருகிறார் என்று சொன்னார்.

இது கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஷ்ரேயாஸ் ஐய்யரும் ஏற்கனவே ரிஹாப் (மறுவாழ்வு பயிற்சி) தொடங்கிவிட்டார். இருவரும் விரைவில் அணியோடு இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று புன்னகையுடன் கூறினார். இருவரும் இல்லாததால் இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல். ராகுலுல் கேப்டனாக செயல்படுவார்.

அதே சமயம் ஓப்பனிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இறங்க வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், திலக் வர்மா போன்றவர்கள் விளையாடுவார்கள்.“சுப்மன் கில்லும் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், அணிக்குத் திரும்ப தயாராகி வருகிறார்கள் என்பதே மிகப் பெரிய நல்ல செய்தி” என்று மார்க்கெல் மீண்டும் வலியுறுத்தினார். ரசிகர்களும் இவர்கள் விரைவில் களம் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.