“எனக்கு ஐடியா இல்லையா?”... டென்ஷனாகி பதிலடி கொடுத்த பிளெமிங்!

இப்ப இருக்குற அணியில நிறைய புதிய பிளேயர்கள் வந்திருக்கிறதால, டீம் செட்டிலாக டைம் ஆகும் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், அணியின் சமீபத்திய செயல்பாட்டுக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, “நல்லா செய்யாதபோது விமர்சனம் வருவது நியாயமானதுதான்” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 சீசனில் CSK அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஃபிளெமிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,“நாங்கள் கடந்த சீசனில் ‘ஆஃப் தி பேஸ்’ (பின்தங்கிய நிலையில்) இருந்தோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு அணி ஒரு மாற்றத்தை (strategic reset) செய்துள்ளது. இளம் வீரர்களை அணியில் இணைப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்” என்றார்.

ஐபிஎல் வேகமாக மாறி வரும் வடிவத்துடன் தான் பின்தங்கிவிட்டதாக வரும் விமர்சனங்களை மறுத்த ஃபிளெமிங்,“விமர்சனம் வருவது நியாயமானதுதான், குறிப்பாக நல்ல முடிவுகள் வராதபோது. ஆனால் நான் ஆண்டு முழுவதும் பல்வேறு லீக்குகளில் பயிற்சியாளராகவும், வீரர்கள் ஏலத்தில் ஈடுபட்டும் இருக்கிறேன்.

ஐபிஎல்லுக்கு வெளியே இருந்தபடியே T20 கிரிக்கெட்டின் தற்போதைய போக்கை நன்றாகப் புரிந்துகொண்டு வருகிறேன். உண்மையில், இப்போதுதான் T20 கிரிக்கெட் மற்றும் உலகளாவிய வீரர்களைப் பற்றி இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆழமாகப் படித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

அணியின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசிய அவர், “கடந்த சீசனில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். ஆனால் இப்போது இளம் வீரர்களை அதிகம் இணைத்து, அணியை புதுப்பித்து வருகிறோம். இது நீண்டகால வியூகத்தின் ஒரு பகுதி” என்று விளக்கினார்.ஸ்டீபன் ஃபிளெமிங் தலைமையில் CSK அணி இந்த சீசனில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்றாலும், அணியின் எதிர்காலத்துக்கு இளம் வீரர்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அவர் உறுதிப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, எந்த ஐடியாவும் இல்லாமலும் நான் நேரா IPL-க்கு வர. இப்ப இருக்குற அணியில நிறைய புதிய பிளேயர்கள் வந்திருக்கிறதால, டீம் செட்டிலாக டைம் எடுக்கும். நம்பிக்கை வந்துட்டா வெற்றியும் வந்துடும். அதே மாதிரி மேட்ச்ச ஜெயிக்குறது பிளேயர்கள் கையில தான் இருக்கு. கோச் வெளியில் இருந்து மட்டும்தான் ஹெல்ப் பண்ண முடியும்" எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் பேட்டி, CSK ரசிகர்களிடையே ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.