ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நான்காவது நாள் மழை காரணமாக தற்போது தாமதமாகி வருகிறது.
மேலும் டெஸ்ட் டிரா ஆனாலும் வெற்றி இந்தியா பக்கமே உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.முதல் 3 டெஸ்ட் போட்டி முடிவுகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.மேலும் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்த கோலி படை டிக்ளர் செய்தது.
இந்நிலையில் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை சேர்த்தது.ஆனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணியானது 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து தடுமாறியது.இதனிடையே இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தொடர்ந்து தாமதமானது.
மேலும் தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து கொண்டே இருப்பதால் ஆட்டம் தாமதமாக தொடங்கிய போதும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் டெஸ்ட் போட்டி டிரா ஆகவே அதிக வாய்ப்புகள் இர். இதனால், 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைக்க காத்திருக்கிறது.
unknown node