இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் வீரர்கள் அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து விளையாடவேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Shoaib Akhtar

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

சரியாக விளையாடாத முக்கியமான காரணமே அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் எனவும் பலரும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா பி அணியை கூட பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெறுவது சந்தேகம் தான் அவர்களுடைய பார்ம் மோசமாக இருக்கிறது என பேசியிருந்தார்.

அவரை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் பாகிஸ்தான் பார்ம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.  தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” பாகிஸ்தான் இந்த அளவுக்கு மோசமாக விளையாடி தோல்வி அடைவது மிகவும் வேதனையான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். இன்னும் நிறைய விதமான திட்டமிடுதல் பற்றி யோசித்து சிறப்பான விளையாடவேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருப்பதை நான் பார்க்கிறேன்.

அதைப்போல, அணியின் சில வீரர்களின் விளையாட்டு எனக்கு திருப்தி அடையும் படி இல்லை. அவர்கள் விளையாடிய விதங்களை பார்க்கும்போது திறமை இருக்கிறதா? என்கிற கேள்வியை கேட்க எனக்கு தோணுகிறது. குறிப்பாக மொஹம்மத் ஹபீஸி விளையாடிய விதம் எனக்கு கோபம் தான் அடைய செய்தது. அவருடைய விளையாட்டு ரொம்ப அசாதாரணமாக இருப்பது போல தோணுகிறது. அவர் அணியின் தேவைகளுக்கு ஏற்ப தன்னுடைய விளையாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அவர் மட்டுமில்லை பாகிஸ்தான் அணியில் விளையாடும் மற்ற வீரர்களும் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து விளையாடவேண்டும். அப்போது தான் நம்மளுடைய மீது விமர்சனங்கள் எதுவும் வராது. அதனை விட்டு விட்டு இப்படியா மோசமாக விளையாடுவது? தவறை திருத்திக்கொண்டு சரியாக விளையாட முயற்சி செய்யுங்கள் ” எனவும் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்