ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி? அனில் கும்ப்ளே ஓபன் டாக்!

ரவீந்திர ஜடேஜா மீது கேப்டன் பதவி வீசப்படுகிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

jadeja rr Anil Kumble

சென்னை :2026 மெகா ஏலத்துக்கு முன் நடந்த பெரும் வர்த்தகத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அவர்களின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிந்திரன் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு டிரேட் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மாற்றாக, RR-ன் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK-க்கு வந்துள்ளார். சாம் கர்ரன் உடனும் டிரேட் ஆனார். ஜடேஜா CSK-யில் 2012 முதல் 14 ஆண்டுகள் விளையாடி, 186 போட்டிகளில் 2,198 ரன்கள் அடித்து 143 விக்கெட்டுகள் எடுத்தவர். அவர் RR-ல் 2008-2011 வரை 27 போட்டிகளில் 430 ரன்கள், 6 விக்கெட்டுகள் எடுத்து IPL-ஐ தொடங்கியவர். இந்த டிரேட், IPL வரலாற்றின் பெரிய மாற்றங்களில் ஒன்று. ஜடேஜா CSK-யில் ரூ18 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், இப்போது RR-ல் ரூ14 கோடிக்கு (ரூ 4 கோடி குறைவு) சென்றுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, JioStar IPL ரிட்டென்ஷன் ஷோவில் இந்த டிரேட் குறித்து விரிவாகப் பேசினார். “ரவிந்திரன் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸுக்கு திரும்புவது பெரிய நகர்வு. பொதுவாக CSK தங்கள் வீரர்களை, குறிப்பாக ஜடேஜா போன்ற தரமான, நீண்ட உறவு உள்ள வீரரை விடுவதில்லை. அவர்களை விட்டுவிட்டது எனக்கு ஆச்சரியம்,” என்று கும்ப்ளே சொன்னார். CSK-யின் இந்த முடிவு, அணியின் பெரிய மறுசீரமைப்பை (rebuild) காட்டுகிறது என்றும், ஜடேஜாவை விட்டதால் அணியின் பேட்டிங் மற்றும் போவ்லிங் இரண்டையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சஞ்சு சாம்சன் CSK-க்கு வருவது சிறந்த நகர்வு என்றும், அவர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அணிக்கு ஸ்திரத்தன்மை தருவார் என்றும் பாராட்டினார். கும்ப்ளேயின் முக்கிய கேள்வி: “ஜடேஜாவுக்கு கேப்டன்சி சொன்னார்களா?” RR சஞ்சு சாம்சனை விட்டதால் புதிய கேப்டன் தேடுகிறது. “ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கேப்டன் தேவை. ரியான் பராக் கடந்த சீசனில் சஞ்சு இல்லாத போது சில போட்டிகளை லெட் செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் எப்போதும் கேப்டன்சி கனவு வைத்திருக்கிறார். இளம் த்ருவ் ஜூரல் நல்ல மனோதிடன் கொண்டவர். வெளிநாட்டு வீரராக சாம் கர்ரன் உள்ளார். இதில் ஜடேஜா மிக சுவாரஸ்யமான விருப்பம்,” என்று கும்ப்ளே விரிவாக விளக்கினார்.

ஜடேஜா 2022-ல் CSK-யை கேப்டனாக வழிநடத்தியவர், பின்னர் MS தோனிக்கு கைமாற்றினார். RR-ல் ஜடேஜா கேப்டனாக வந்தால், அணியின் இளம் வீரர்களை (பராக், ஜெய்ஸ்வால்) வழிநடத்தி, தொடக்கத்தில் நன்றாக இருந்து பிளேஆஃபில் தடுமாறும் பிரச்சினையை சரி செய்யலாம் என்று அவர் கூறினார்.

அதைப்போல, முன்னாள் இந்திய செலக்டர் சாபா கரிம், கும்ப்ளேயுடன் இணைந்து பேசினார்: “இந்த லீக்கை maturity) காட்டுகிறது. வீரர்களும் அணிகளும் உணர்ச்சிகரமாக முடிவு எடுக்காமல், கடினமான தேர்வுகளைச் செய்யும்போது.” ஜடேஜா தனது கேரியரின் இந்த கட்டத்தில் RR-ல் புதிய அஜெண்டாவுடன் (agenda) இருக்கிறார்; இளம் அணியை உருவாக்கி வெற்றி அணியாக மாற்றலாம் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.