முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அதிரடியாக அரை சதம் விளாசியுள்ளார்.

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லிடான்னு சொல்ற மாதிரி ஒரு சம்பவத்தை நேற்று பண்ணிருக்காரு. விராட் கோலி பேட்டிங் செய்ய என்ட்ரி கொடுக்கும் பொழுது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, ”கோலி, கோலி” என்று ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமான சத்தம் 138 டெசிபலாம். இது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய சத்தங்களில் ஒன்றாகும். இந்த சீசன்ல இதுக்கு முன்னாடி சேப்பாக்கத்துல தல தோனிக்காக கிடச்ச (120 டெசிபல்) சத்தத்த மொத்தமா முடிச்சி விட்டிருக்காரு விராட் கோலி.
138 dB WHEN KOHLI CAME TO BAT AT WANKHEDE…!!!
– Highest in IPL 2025 ⚠️ pic.twitter.com/imV0NAV2EE
— Johns. (@CricCrazyJohns) April 7, 2025
இதில் சுவாரஸ்யம் என்னென்னா, மும்பையோட சொந்த மைதானத்தில் இந்த சாதனையை பண்ணுனதுதான். நேற்றைய தினம், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், படிக்கல், கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. கோலி 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.
Virat Kohli walks in to a rousing reception from Wankhede. ❤️ pic.twitter.com/LFdBhSLjHc
— Sameer Allana (@HitmanCricket) April 7, 2025
மேலும், அவர் முதல் 17 ரன்களை கடந்திருக்கும் விராட் கோலி, டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் 14,562 ரன்களுடன் கிறிஸ் கெயில் இருக்கிறார். அலெக்ஸ் ஹேல்ஸ், ஷோயப் மாலிக், கீரன் பொலார்டு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்க, விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.