#SAvIND: 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா!

India were bowled out for 327 in the first Test against South Africa.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது.

தற்போது மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வந்த நிலையில்,  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 272 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 55 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்துள்ளன. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் லுங்கி என்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.